தமிழ்நாடு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார். வரும் 20ஆம் தேதி காட்டூரில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு தலைமையேற்க உள்ளார்.தமிழகத்தில் இருந்து யாரும் பிகார் மாநிலத்திற்கு வேலை தேடி செல்வதில்லை. பிகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பிகாரில் இருந்து தான் வந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம் செய்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் சர்ஜரி செய்யவுள்ளதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்ச்சியான சூழலால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு, செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.கடலூரில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இந்தியஸ்ரீ என்ற பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டார். தனநந்தினி உள்பட 6 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 17,07,700 ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் மோடி அரசுக்கு நம்பிக்கை இல்லையா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.மணிப்பூர் பாஜக அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது. மேலும் அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்திற்கு அனுப்புங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் போட்டுள்ளார்.
வர்த்தகம்
ஐஆர்சிடிசிக்கு போட்டியாக ரயில் டிக்கெட் விற்பனையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது அதானி குழுமம். இதற்காக ஆன்லைன் டிக்கெட் விற்பனை நிறுவனமான Train Man என்ற நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குகிறது.சென்னையில் 393வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் 2 பிரிவுகளாக பங்கேற்றுள்ளனர்.