நடிகர் விஜய் நேற்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை அழைக்கவில்லை என்று விழா நடந்த வாசலில் மாணவி மற்றும் அவரது தாய் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் மாணவி மாநிலத்திலேயே மூன்றாவதாக இடம் பிடித்ததாகவும், என்னை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து அழைப்பார்கள் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அழைக்கவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஒரு சில தவறுகளால் இது நேர்ந்திருக்கலாம் எனவும் இரண்டு நாட்கள் கழித்து பனையூர் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்திற்கு நேரில் சென்று கூறுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என்று அந்த மாணவி மற்றும் அவருடைய தாயாருக்கு ஆறுதல் கூறி விஜய் மக்கள் இயக்கத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.