ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் சர்வதேச அளவில் தினசரி தலைப்பு செய்தி. ஓராண்டை கடந்து போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா பலம் வாய்ந்த ஆயுதங்களை கையில் வைத்திருந்தும் போரை மெதுவாக நடத்தி செல்வது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. குட்டி நாடான உக்ரைன் தனது சிறிய படையுடன் முடிந்தவரை மோதி பார்த்து கொண்டிக்கிறது. இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள், பெரும் பொருட்சேதம் என நிலைமை மோசமாக காணப்படுகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் பலவும் உதவி செய்து வருகின்றன. ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமே ஓராண்டை தாண்டியும் உக்ரைன் படையால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்கின்றனர். ரஷ்யாவிற்குள் தங்கள் தாக்குதலை தொடுத்தாலும் பெரிய அளவில் உக்ரைனால் முன்னேற்றம் காண முடியவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எடுத்துள்ள நடவடிக்கை ஒட்டுமொத்த உலகையும் பரபரப்பிற்கு ஆளாக்கியுள்ளது.
ரஷ்யாவை முதுகில் குத்திய சீனா.. ராணுவ தகவல்களை உளவு சொன்ன ஆராய்ச்சியாளார்கள் கைது.!
அணு ஆயுதப் போர் ஆபத்து
சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். அப்போது விரைவில் அணு ஆயுதப் போர் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு தகவலை கொளுத்தி போட்டியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ரஷ்யாவின் நட்பு நாடாக பெலாரஸ் திகழ்ந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் தங்கள் நாட்டு ஆயுதங்களை வைப்பதற்கு பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
விளாடிமிர் புடின் அறிவிப்பு
இந்த நாடு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே வடமேற்கில் அமைந்துள்ளது. எனவே பெலாரஸ் வழியாக சென்றும் உக்ரைன் நாட்டை தாக்க முடியும். இந்த சூழலில் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த பொருளாதார கூட்டமைப்பில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின், முதல் தொகுதி அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
பெலாரஸ் நாட்டில் குவிப்பு
இதற்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் தான் ஆயுதங்களை பெலாரஸில் கொண்டு போய் வைத்துள்ளோம். தற்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் இல்லை. ஆனால் ரஷ்யாவின் பிராந்தியங்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம். நடப்பாண்டு இறுதிக்குள் மேலும் அதிகப்படியான ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டில் குவிக்கப்படும் என்று புடின் தெரிவித்துள்ளார்.
மனித குலத்திற்கு அடுத்த ஆபத்து… அலறவிடும் பாக்டீரியா… அமெரிக்காவில் மக்கள் பெரும் அதிர்ச்சி!
இரண்டாம் உலகப் போர் நினைவுகள்
போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படையாக அறிவித்திருப்பது உக்ரைன் நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அணு ஆயுதப் போர் என்றால் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்க அணுகுண்டுகளை வீசியது தான் நினைவுக்கு வருகிறது.
அந்த பயங்கரத்தை வரலாறு இன்னும் மறவில்லை. அதன் சுவடுகள் இன்னும் மறையவில்லை. மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், நாடுகளும் போராடி வருகின்றன. இத்தகைய சூழலில் ரஷ்யாவின் அறிவிப்பு எந்த எல்லை வரை போகும் என்பது கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.