பள்ளிகளுக்கு மழை விடுமுறையா? தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் என்ன நடக்கும்? சூப்பர் அப்டேட்!

ஜூன் மாசம் தொடங்கியிருச்சு. பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புதிய கல்வியாண்டில் கல்வி கற்க தொடங்கியுள்ளனர். அதேசமயம் தென்மேற்கு பருவமழை லேசாக ஆட்டம் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் மழை விடுமுறை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.

வானிலை அப்டேட்சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து மழை ஆரம்பித்துவிட்டது. இதனால் வெயிலால் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் ஜில்ஜில் வானிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கியமான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்கள்வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறையா?எனவே மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த சூழலில் ஓய்வு பெற்ற வானிலை ஆய்வாளரும், பள்ளி மாணவர்களின் ஃபேவரைட் நபருமான ரமணன் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் பேசுகையில், பள்ளிகள் விடுமுறை என்பது அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆட்சியர்கள் தான் முடிவு செய்வர்.
​சென்னை வானிலை மைய அறிவிப்பு​​ரமணன் பேட்டிவிடுமுறைக்கு மழை காரணமல்ல. சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளி செல்ல சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் விடுமுறை அளித்து விடுவர். வானிலை ஆய்வு மையம் ஓரிரு இடங்களில் என்று கூறியுள்ளது. அப்படியெனில் சில இடங்களில் தான் மழை பெய்யும். பரவலாக எனச் சொல்லவில்லை என்று கூறினார்.
வெப்பச் சலனம்அப்படியெனில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என்பதை எதிர்பார்க்க முடியாது என்பது போல் தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில், கோடைக் காலங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இது சில மணி நேரங்கள். இல்லையெனில் இரவு முழுவதும் கூட மழை பெய்யக்கூடும்.
மேலடுக்கு சுழற்சிதற்போது வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை பார்க்கையில், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் மேலடுக்கு சுழற்சி இருப்பது தெரிய வருகிறது. எங்கேயும் வெள்ளம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஓரிரு நாட்களுக்கு தான் சில இடங்களில் மட்டுமே மழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாக ரமணன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.