Vijay: அதை ஏன் மேடையில சொன்னீங்க விஜய்?: தலைமுடியை பிச்சுக்கும் தளபதி ரசிகர்கள்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Actor Vijay News: மாணவ, மாணவியர் மத்தியில் தளபதி விஜய் சொன்ன ஒரு விஷயத்தால் தளபதி ரசிகர்கள் தூக்கத்தை இழந்துள்ளனர்.

​விஜய் ரசிகர்கள்​Vijay: 12 மணிநேரம் கால் கடுக்க நின்ற விஜய்: ஸ்மைல், கண்ணீர், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தளபதிநான் நடிக்க வரவில்லை என்றால் டாக்டர் ஆகியிருப்பேன், வக்கீல் ஆகியிருப்பேன், பைலட்டாகியிருப்பேன், ஷெஃப் ஆகியிருப்பேன் என பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இந்நிலையில் தான் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியரை கவுரவித்த விழாவில் தளபதி விஜய்யும் அப்படி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொன்னதை கேட்ட ரசிகர்கள் தலைமுடியை பிய்த்துக்கொள்கிறார்கள்.விஜய் மக்கள் இயக்கம்​”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!​​பள்ளி நினைவு வருகிறது​நிகழ்ச்சியில் விஜய் கூறியதாவது, நான் இசை வெளியீட்டு விழா, விருது விழாக்களில் பேசியிருக்கிறேன். ஆனால் இது போன்ற நிகழ்ச்சியில் பேசுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். மனசுக்கு ஏதோ பொறுப்புணர்ச்சி வந்தது மாதிரி நான் ஃபீல் பண்ணுகிறேன். வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்களை எல்லோரையும் பார்க்கும்போது எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது என்றார்.
​ஒரு வேளை…​விஜய் மேலும் கூறியதாவது, நான் உங்களை மாதிரி பிரைட் ஸ்டூடண்ட் எல்லாம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஆவரேஜ், ஜஸ்ட் பாஸ் ஸ்டூடண்ட் தான். நான் வந்து ஒரு நடிகன் ஆகலைனா அதாயிருப்பேன், இதாயிருப்பேன், ஒரு டாக்டராயிருப்பேன் என சொல்லி உங்களை நான் போர் அடிக்க விரும்பவில்லை. எனக்கு என்னுடைய கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான். அதை நோக்கி தான் என்னுடைய பயணம் போயிட்டு இருந்தது. ஒரு வேளை…. சரி அதை விடுங்க. அது இப்போ எதுக்கு. அது வேண்டாம் என்றார்.

​விஜய் பேசக் கூடாதுனு சொல்லியும் அதை மேடையில் பேசிய மாணவியின் அப்பா: பத்த வச்சிட்டியே பரட்டை

​அய்யோ முடியல​சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்திவிட்டார் விஜய். நடிக்க வரவில்லை என்றால் எதுவாக ஆகியிருப்பார் விஜய்ணா. இப்படி பாதியில் முடித்துவிட்டு சென்றுவிட்டாரே. இதற்கு அதை மேடையில் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். தற்போது அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாமல் பயங்கர கடுப்பாகிறது. லியோ இசை வெளியீட்டு விழாவில் அதை சொல்லிடுங்க விஜய்ணா என்கிறார்கள் ரசிகர்கள்.

​அரசியலா இருக்குமோ?​Thalapathy Vijay:அட்ஜஸ்ட் பண்ணாததால் விஜய் பட ஹீரோயின் வாய்ப்பு போச்சு: நடிகை வருத்தம்விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை உண்டு. அதனால் ஒரு வேளை நடிகராகவில்லை என்றால் அரசியல்வாதி ஆகியிருப்பேன் என சொல்ல வந்திருப்பாரோ?. அதனால் தான் அதை சொல்லாமல் நிறுத்திவிட்டாரோ என ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான பதிலை விஜய்யை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது.

​விஜய் அறிவுரை​சென்னையில் நடந்த விழாவில் சுமார் 1,600 மாணவ, மாணவியர் கலந்து கொண்டார்கள். நீங்கள் எல்லாம் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார் விஜய். மேலும் பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்றும் கூறினார். அதை கேட்ட மாணவ செல்வங்களோ, ஓட்டின் முக்தியத்துவத்தை புரிந்து கொண்டோம். பொறுப்புடன் வாக்களிப்போம் என்றார்கள்.
​அரசியலுக்கு வரணும்ணா​12 மணிநேரம் நடந்த நிகழ்ச்சியில் விஜய் மேடையிலேயே நின்று கொண்டிருந்தார் விஜய். ஒரு கட்டத்தில் சோர்வும், கால் வலியும் தாங்க முடியாமல் மேஜையில் சாய்ந்து நின்றார். அதை பார்த்து ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள். அண்ணா, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கோரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.