தமிழகத்தின் தலைப்பு செய்தியாக செந்தில் பாலாஜி விவகாரம் தான் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதை திசை திருப்பும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நடிகர் விஜய் நடத்திய நிகழ்ச்சி கவனம் பெற்றது. இந்நிலையில் தன்னுடைய இருப்பை காட்டும் வகையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தல்இதில் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை அளித்திருக்கிறார். அவர் பேசுகையில், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது பிரதான எதிர்க்கட்சியாக விளங்கி கொண்டிருக்கிறது. மக்களின் பிரச்சினையை தங்கு தடையின்றி அரசிடம் எடுத்து செல்லும் பணியை நாங்கள் செய்து வருகிறோம்.
அமித் ஷா பேச்சால் சலசலப்புதமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அமித்ஷா கூறியது அவருடைய கருத்து. அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. 1991ஆம் ஆண்டு பாஜக உடன் திமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. 1999ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி நடந்த போது அமைச்சரவையில் திமுகவை சேர்ந்தவர்கள் இடம்பெற்றார்கள்.
எமர்ஜென்சியில் மிசாவை பார்த்த திமுகஎனவே காலத்திற்கேற்ப முடிவை மாற்றிக் கொள்ளும் ஒரே கட்சி திமுக தான். இவர்கள் தான் அடிமை கட்சியாக இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் எமர்ஜென்சியில் மிசாவை பார்த்தோம் என்று கூறி வருகிறார்கள். அப்போது யாருடைய ஆட்சி. காங்கிரஸ் கட்சியுடையது. அப்படிப்பட்ட கட்சிக்கு திமுகவும், ஸ்டாலினும், அவர்களது குடும்பமும் அடிமையாக இருந்து கொண்டிருக்கிறது.
மக்களவை தேர்தல் இலக்குவரக்கூடிய 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தான் எங்கள் கழக உறுப்பினர்கள் வேலை செய்து வருகிறோம் என்றார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, திமுக கூட்டணி போல எங்களுடன் இருப்பவர்கள் ஒட்டிக் கொண்டே இருப்பதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தன்மை உண்டு. தேர்தல் வரும் போது தான் வடிவம் பெறும்.
வெள்ளை காக்கா காமெடிஅதுவரை அவரவர் எண்ணங்களை தெரிவித்து கொண்டு தான் இருப்பார்கள். திமுக கூட்டணி மாதிரி கடிவாளம் போட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். வெள்ளைக் காக்கா பறக்குதுனு சொன்னா, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் வெள்ளை காக்கா பறக்குதுனு தான் சொல்வார்கள் என விமர்சனம் செய்தார். செந்தில் பாலாஜி வழக்கு குறித்து பதிலளிக்கையில், அவரை முதலில் விமர்சனம் செய்ததே ஸ்டாலின் தான்.
செந்தில் பாலாஜி வழக்குதற்போது செந்தில் பாலாஜி வழக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை சமர்பிக்க உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்படும் என எச்சரித்தது. இப்படிப்பட்ட சூழலில் தான் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் கோவையில் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.