திருச்சி இன்று திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது இன்று இரவு திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவருக்குத் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு அவர் கார் மூலம் திருவாரூர் சென்று ஓய்வெடுக்க உள்ளார். முதல்வர் நாளை திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செவ்வாய் அன்று திருவாரூரில் நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். […]