ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வரும் லியோ படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
“பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!
படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்நிலையில் படத்தின் காஷ்மீர் ஃபுட்டேஜை லியோ இசையமைப்பாளர் அனிருத்துக்கு போட்டுக் காட்டியிருகிறார்கள்.
அதை பார்த்த அனிருத் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் கூறியதாவது,
சார், இந்த படம்லாம் எந்த லெவல் போகும்னே தெரியாது… அந்த மாதிரி இருக்கு. நீங்கள் கண்ணை முடிக்கிட்டு எவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் ஆகும்னு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
வெறும் காஷ்மீர் காட்சிகளுக்கே இப்படி சொல்லியிருக்கிறார் அனிருத். மொத்த படத்தையும் பார்த்தால் மெர்சலாகிவிடுவார் போன்று.
Leo: விஜய்யின் லியோவில் பிரேமம் பட நடிகை: லைட்டா பயத்தில் தளபதி ரசிகர்கள்
படப்பிடிப்பு முடியப் போகும் நிலையிலும் கூட தினமும் ஒரு நடிகர், நடிகையை சேர்த்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பிரேமம் படம் புகழ் மடோனா செபாஸ்டியன் லியோவில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் வையாபுரியும் லியோவில் நடிக்கிறாராம். லோகேஷ் கனகராஜும், வையாபுரியும் இருக்கும் புகைப்படம் வெளியாகி தளபதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதை பார்த்த சினிமா ரசிகர்களோ, என்ன லோகி இதெல்லாம். கடைசி நாள் வரை ஆட்களை எடுப்பீர்களா?. லியோவில் அப்படி என்ன தான் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே நா ரெடி பாடல் பற்றி லியோ பட தயாரிப்பாளரான லலித் குமார் கூறியிருப்பதாவது,
நா ரெடி பாடலில் விஜய்யை பார்த்தால் 10 வயது குறைந்து காணப்படுவார். மாஸ்டர் படத்தில் வந்த வாத்தி கமிங் பாடல் போன்று இதுவும் பெரிய அளவில் ஹிட்டாகும்.
நா ரெடி பாடலை பெரிய பட்ஜெட்டில் 2 ஆயிரம் டான்ஸர்களை வைத்து 8 நாட்கள் ஷூட் செய்ய திட்டமிட்டோம். தளபதி விஜய்யோ தினேஷ் மாஸ்டரை அழைத்து ஒரு நாளுக்கு முன்பே முடித்துவிடுங்கள், தயாரிப்பாளருக்கு நல்லது என்றார். பிரேக் இல்லாமல் கூட நான் ஆடுகிறேன். சீக்கிரமாக முடியுங்கள் என்றார் விஜய். அதனால் 7 நாட்களில் பாடல் ஷூட்டை முடித்தோம். எனக்கு ரூ. 1 கோடி மிச்சம்.
நா ரெடி பாடல் நன்றாக வந்திருக்கிறது. அது வெளியான பிறகு அனைவரும் அதை பற்றியே பேசுவார்கள். விஜய்யின் டான்ஸ் சிறப்பாக இருக்கிறது. அவரை போன்று இங்கு யாராலும் டான்ஸ் ஆட முடியாது.
காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது விஜய் வேறு ஒரு ஹோட்டலில் இருந்தார். முதல் ஆளாக எனக்கு மெசேஜ் அனுப்பி, அனைவரும் பத்திரமா என கேட்டார்.
பிற கலைஞர்கள் எல்லாம் பெரிய ஹோட்டல்களில் இருந்து உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். ஆனால் விஜய்யோ ப்ரொடக்ஷன் சாப்பாட்டை சாப்பிட்டார். செட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்ட அதே சாப்பாட்டை சாப்பிட்டார். அவருக்கு 2 தோசை இருந்தால் போதும் என்றார்.
Vijay: அதை ஏன் மேடையில சொன்னீங்க விஜய்?: தலைமுடியை பிச்சுக்கும் தளபதி ரசிகர்கள்
லலித் குமார் கூறியதை கேட்ட தளபதி ரசிகர்களோ, எங்க அண்ணன் மாதிரி யாரு மச்சான் என பெருமையாக பேசி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தோற்றத்தை பார்த்த அனைவரும் அசந்துவிட்டார்கள்.