சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகைகள் தங்கள் தந்தையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அப்பாவான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தந்தையர் தினம் கொண்டாடி உள்ளார்.
தனது குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு தனது முகத்தைக் கூட காட்டாமல் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை நயன்தாராவை எங்கே காணவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தந்தையர் தினம்: ஜூன் 18ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபல நடிகர்கள், நடிகைகள் தங்கள் தந்தையருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தந்தைக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
மறைந்த தந்தையின் பாசத்தையும் தியாகத்தையும் நினைத்து பல பிரபலங்கள் நீங்காத நினைவுகளில் மூழ்கி வருகின்றனர்.
நயன்தாரா ஹேப்பி: கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் ஆன இயக்குநர் விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
சமீபத்தில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் ஆகி ஓராண்டு ஆனதை மகன்களுடன் அம்மா நயன்தாராவும் அப்பா விக்னேஷ் சிவனும் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகின.
தந்தையர் தினம் கொண்டாடிய விக்னேஷ் சிவன்: இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்நிலையில், தற்போது தனது இரண்டு ஆண் மகன்களுடன் சேர்ந்துக் கொண்டு தந்தையர் தினத்தைக் கொண்டாடி உள்ளார்.
அந்த போட்டோவை சற்று முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். நடிகை நயன்தாரா தான் இந்த க்யூட்டான புகைப்படத்தை எடுத்தாரா என்றும் என்ன யார் முகமும் தெரியவில்லையே என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அடுத்த படம் எப்போ: அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசியில் அஜித் அவர் வேண்டாம் என நீக்கி விட்டார்.
அடுத்ததாக லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் பண்ணப் போகிறார் என சொல்லப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த படத்தை ஆரம்பித்ததாக தெரியவில்லை. கூடிய விரைவிலேயே பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் படமெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியையும் விக்னேஷ் சிவன் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.