சிஎஸ்கே வீரராக இருந்துகொண்டு… மொயீன் அலி செய்த காரியம்; அபராதம் விதிப்பு – என்ன தெரியுமா?

Moeen Ali Fined:  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தனது பந்துவீச்சு கையில் ஈரத்தை உலர்த்தும் மருந்து போன்ற பொருளை நடுவர்களின் முன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

“வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகள் 2.20 ஐ அலி மீறியது கண்டறியப்பட்டது. இது விளையாட்டின் நேர்மைக்கு முரணான நடத்தையை வெளிப்படுத்துவது தொடர்பானது” என்று ஐசிசி இதுகுறித்த வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தவிர, அலியின் ஒழுக்காற்று பதிவில் ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதுய. அவருக்கு இது 24 மாத காலப்பகுதியில் முதல் குற்றமாகும்.

JUST IN: Moeen Ali found guilty of breaching ICC Code of Conduct!

More https://t.co/iau6ufFNhx

— ICC (@ICC) June 18, 2023

2ஆவது நாளில் ஆஸ்திரேலியா பேட்டிங்கின் 89வது ஓவரில், அடுத்த ஓவரை வீசுவதற்கு முன் மொயீன் அலி தனது பந்துவீச்சு கையில் ஈரத்தை உறிஞ்சும் மருந்து போன்ற பொருளை பவுண்டரி லைனுக்கு அருகே பயன்படுத்தினார். இதை பார்த்த போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அலிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

அவருக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. நடுவர்களின் முன் அனுமதியில்லாமல், வீரர்கள் தங்கள் சொந்த விஷயங்களுக்காக எதையும் பயன்படுத்தக் கூடாது என்ற தொடருக்கு முந்தைய அறிவுறுத்தல்களை மீறி இந்த சம்பவம் நடந்தால் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மொயீன் அலி இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் அந்த மருந்து போன்ற பொருளை கைகளில் பயன்படுத்தினாரே தவிர பந்தின் மீது பயன்படுத்தவில்லை. எனவே அவரிடம் விசாரணை தேவையில்லை. வீரரை அனுமதிக்கும் முடிவை எட்டியதில், ஆட்ட நடுவர் அலி தனது கைகளை உலர்த்துவதற்கு மட்டுமே ஸ்ப்ரேயைப் பயன்படுத்தினார் என்பதில் உறுதியாக இருந்தார்.

The Ashes: Moeen Ali fined 25 per cent of match fees by ICC for ‘applying drying agent to bowling hand’#TheAshes pic.twitter.com/W4knBjtvfY

— Kushal Singh (@KushalS86039717) June 18, 2023

கள நடுவர்கள் அஹ்சன் ராசா மற்றும் மரைஸ் எராஸ்மஸ், மூன்றாவது நடுவர் கிறிஸ் கஃபனே மற்றும் நான்காவது நடுவர் மைக் பர்ன்ஸ் ஆகியோர் இக்குற்றச்சாட்டை சுமத்தினர். நிலை 1 மீறல்களுக்கு உத்தியோகபூர்வ கண்டனத்தின் குறைந்தபட்ச அபராதம், ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு குறைபாடு புள்ளிகள் விதிக்கப்படும்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 393 ரன்களை எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா 387 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியுள்ளது. தற்போது 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை மேற்கொண்டு வருகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.