டில்லி மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக முத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த […]