ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Vijay Makkal Iyakkam: மாணவ, மாணவியரை விஜய் கவுரவித்த நிகழ்ச்சியில் அப்பா ஒருவர் தளபதிக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
கவுரவித்தார் விஜய்234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவித்தார் விஜய். சென்னையில் இருக்கும் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 1, 600 மாணவ, மாணவியர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது தன் மகளுடன் மேடைக்கு வந்த அப்பா ஒருவர் விஜய்யிடம் வைத்த கோரிக்கை பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. விஜய் பேசக் கூடாது என சொல்லிய விஷயத்தை அந்த அப்பா பேசியிருக்கிறார்.தளபதி”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!அன்பு கோரிக்கைஅந்த மாணவியின் அப்பா மேடையில் கூறியதாவது, பள்ளி குழந்தைகளுக்கு இந்த நிகழ்ச்சி. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான நிகழ்ச்சி இது. சாரிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியருக்கும் இதே போன்று நிகழ்ச்சி நடத்த வேண்டும். பல்கலைக்கழகத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடத்தினால் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
அப்பாஅரசியல் திட்டம்விஜய் அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருக்கும் நேரத்தில் இளம் வாக்காளர்களை கவரச் சொல்லியிருக்கிறார் அந்த அப்பா. அவர் சொன்னதை கேட்டு அரங்கில் இருந்தவர்கள் மகிழ்ச்சி கரகோஷமிட்டனர். அந்த மாணவியின் அப்பா மேலும் கூறியதாவது, இந்த டாப்பிக் பற்றி பேசக் கூடாது என்று சார் கேட்டுக் கொண்டார். இருந்தாலும் எனக்கு மனசுக்கு கேட்கல. ஆனால் ஒரு இரண்டை மாற்றுவதற்கு புதுசா ஒன்னும் வரணும் என்கிறபோது சார் தயவு செய்து கன்சிடர் பண்ணுங்க என்றார். அதை கேட்டு விஜய் அமைதியாக நின்றார்.
மாற்றுக் கட்சிதிமுக இல்லை அதிமுக என்று தான் இருக்கிறது. அந்த இரண்டை மாற்றுவதற்கு விஜய் வர வேண்டும் என அந்த மாணவியின் அப்பா இப்படியொரு ஐடியா கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதை கேட்டு அரங்கமே அதிர்ந்தது. விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துவிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுக்கு பணம் வேண்டாம்இளம் தலைமுறையினர் மத்தியில் பேசிய விஜய், ஓட்டு போட பணம் வாங்கக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கினார். பெரியார், அம்பேத்கர், காமராஜரை படித்தாலே இளம் செல்வங்கள் சரியான முறையில் வாக்களிப்பார்கள். விஜய் அருமையான அறிவுரை வழங்கியிருக்கிறார் என பலரும் பாராட்டுகிறார்கள்.
மாணவியின் கோரிக்கைதன் பெற்றோருடன் மேடைக்கு வந்த மாணவி ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகையை கொடுத்தார் விஜய். அந்த மாணவியோ, என் வெற்றி காரணம் என் பெற்றோர். அதனால் அவர்களுக்கு இந்த பொன்னாடையை போர்த்த முடியுமா என்று கேட்டார். இது வேண்டாம் என புது பொன்னாடைகளை எடுத்து அந்த மாணவியின் பெற்றோரை கவுரவித்தார் விஜய்.
12 மணிநேர நிகழ்ச்சிVijay: 12 மணிநேரம் கால் கடுக்க நின்ற விஜய்: ஸ்மைல், கண்ணீர், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தளபதிகாலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 11.20 மணி வரை நடந்தது. 12 மணிநேரமாக மேடையில் நின்று கொண்டே இருந்தார் விஜய். ஒரு கட்டத்தில் அவர் மேஜையில் கை வைத்து சோர்வாக நின்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்துவிட்டது. சோர்வாக இருந்தாலும் ஸ்மைல் மட்டும் அப்படியே இருந்தது.
சோர்வு