160cc சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடலுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்துகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, பல்சர் என்எஸ் 160 என இரண்டு மாடல்கள் நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.
மறைமுகமாக யமஹா FZ-S FI 4.0, எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, பல்சர் என்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, ஹோண்டா எக்ஸ்-பிளேடு, மற்றும் ஹோண்டா யூனிகார்ன் 160 ஆகியவற்றுடன் 160cc சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது. இங்கே ஒப்பீடுக்காக நேரடியான போட்டியாளர்களை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
Hero Xtreme 160R 4V vs Rivals
இந்திய சந்தையில் ஸ்போர்ட்டிவ் சந்தையாக துவங்குகின்ற 150cc முதல் 160cc பிரிவில் அப்பாச்சி, பல்சர் பைக்குகள் யமஹா போன்றவற்றுடன், எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்குகள் மிகவும் நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் , கனெக்ட்டிவ் வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.
இந்த பிரிவில் 17.3 bhp அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 160ஆர் 4வி பைக் வெளிப்படுத்துகின்றது. அதனை தொடர்ந்து பல்சர் என்எஸ் 160 மாடலும் எக்ஸ்ட்ரீம் பைக்கும் உள்ளது.
அனைத்து நுட்பவிவரங்களும் அட்டவனையில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
Specs | Xtreme 160R 4V | Xtreme 160R 2V |
Pulsar NS160 | Apache RTR 160 4V |
Engine | 163.2 Air-Oil Cooled,Fi 4V | 163.2 Air Cooled, Fi 2V | 160.3 Air-OilCooled, Fi 4V | 159.7 Air-Oil Cooled,Fl 4V |
Power | 16.9 bhp at 8500 RPM | 15 bhp at 8500 RPM | 17 bhp at 9000 RPM | 17.3 bhp at 9250 RPM |
Torque | 14.6 Nm at 6500 RPM | 14 Nm at 6500 RPM | 14.6 Nm at 7250 RPM | 14.73 Nm at 7250 RPM |
Transmission | 5-speed | 5-speed | 5-speed | 5-speed |
Wheelbase | 1333 mm | 1327 mm | 1372 mm | 1357 mm |
Ground Clearance | 165 mm | 167 mm | 170 mm | 180 mm |
Seat Height Rider | 795 mm | 790 mm | 805 mm | 800 mm |
Kerb Wt | 144 -145 kg | 140 -143 kg | 152 kg | 144 – 146 kg |
Fuel Tank | 12 litre | 12 litre | 12 litre | 12 litre |
Front Tyre | 100/80-17 | 100/80-17 | 100/80-17 | 90/90-17 |
Rear Tyre | 130/70-17 | 130/70-17 | 130/70-17 | 110/80-11 130/70-17 |
Front Brake | 276mm Disc (petal) | 276mrn Disc (petal) | 300mm Disc | 270mm (petal) |
Rear Brake | 220mm Disc (petal) | Drum / 220mm Disc (petal) | 230mm Disc | 130 mm Drum / 200mm Disc (petal) |
ABS | Single | Single | Dual | Single |
Front Suspension | USD/Telescopic | Telescopic | USD Telescopic | Telescopic |
Rear Suspension | Mono-shock | Mono-shock | Mono-shock | Mono-shock |
Price Range,Rs | 1.27 to 1.36 lakhs | 1.18 to 1.3 lakhs | 1.36 lakh | 1.23 to 1.32 lakhs |
இந்த பைக் பிரிவில் பஜாஜ் என்எஸ் 160 பைக் மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக வந்துள்ளது. மற்ற மாடல்கள் அனைத்தும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக உள்ளது.
Hero Xtreme 160R 4V vs Rivals Price
Models | Prices |
Hero Xtreme 160R 4V | ₹ 127300 – ₹ 1,36,500 |
TVS Apache RTR 160 4V | ₹ 1,23,770 – ₹ 1,32,070 |
Bajaj Pulsar N160 | ₹ 1,30,560 |
Yamaha FZ-S FI 4.0 | ₹ 1 28 400 – ₹ 129,130 |
Bajaj Pulsar NS160 | ₹ 1,36,736 |
(ex-showroom chennai)