500 crore for new equipment to improve military communications | ராணுவ தகவல் தொடர்பை மேம்படுத்த 500 கோடிக்கு புதிய கருவிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பை மேம்படுத்த, ‘ஐகாம் டெலி’ என்ற தகவல் தொடர்பு நிறுவனத்துடன், 500 கோடி ரூபாய்க்கு, மத்திய பாதுகாப்புத் துறை, ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது

latest tamil news

அதாவது, ‘5/7.5 டன் ரேடியோ ரிலே’ என்ற தகவல் தொடர்புக்கு உதவும், 1,035 கன்டெய்னர்களை தயாரித்து, ராணுவத்திற்கு வழங்க உள்ளது இந்நிறுவனம்.இது, இந்திய ராணுவத்தின் நீண்டகால மொபைல் தகவல் தொடர்பு தேவையை நிவர்த்தி செய்யும். அத்துடன், ராணுவம் இடையே தகவல்களை நம்பகமாக பரிமாறிக் கொள்ள, பாதுகாப்பான சூழலையும் ஏற்படுத்தி தருகிறது.இந்த கன்டெய்னரை, பிரத்யேக ராணுவ வாகனத்தில் வைத்து, தேவைக்கேற்ப நகர்த்திக் கொள்ளலாம்.

latest tamil news

இதன் தயாரிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்தே பெறப்படுகின்றன. இது போன்ற தயாரிப்புகள், நட்பு நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.இந்த ஆண்டுக்குள் இதன் வினியோகம் ஆரம்பமாகும் என, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.