லாஸ் ஏஞ்சல்ஸ், விரைவில் ஸ்மார்ட் டிவிகளுக்கன டிவிட்டர் வீடியோ செயலி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க் டிவிட்டரைத் தன்வசப்படுத்தினார். அவர் அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்றாக உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். மேலும் டிவிட்டருக்குக் கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் டிவிட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் […]