வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : வழக்கம் போல் இந்தாண்டும் மே.வங்க முதல்வர் மம்தா அசாம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு மாம்பழங்களை பரிசாக அளித்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
இந்தியா வங்கதேசம் நாடுகளின் ராஜ தந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நாட்டில் விளையும் மாம்பழங்களை பரிசளித்து வருவது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல் ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகை மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம் திரிபுரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கும் ஷேக்ஹசீனா மாம்பழங்களை அனுப்பி உள்ளார்.
இதன்படி மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழங்கள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அசாம் மாநிலமுதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா மற்றும் திரிபுரா மாநில முதல்வருக்கு என 500கிலோவும் அனுப்பி உள்ளார். தொடர்ந்து மாம்பழங்களை பரிசாக வழங்கிய வங்க தேச பிரதமர் ஷே க் ஹசீனாவுக்கு திரிபுரா மாநில மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என மாநில முதல்வர் மாணிக் சாஹா பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.
முந்தைய ஆண்டுகளில் வங்க தேச பிரதமர் , பிரதமர் மோடி, முன்னாள் காங்., தலைவர் சோனியா, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement