வாட்ஸ்அப் புதுப்பிப்பு: மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் iOS இல் சில சோதனையாளர்களுக்கு வீடியோ அழைப்புகளுக்கான திரை-பகிர்வு அம்சத்தை (ஸ்க்ரீன் ஷேரிங்க் ஃபீச்சர்) வெளியிடுகிறது. பீட்டா பயனர்கள் வீடியோ அழைப்பின் போது கீழே ஒரு புதிய ஐகானைக் காண்பார்கள் என்று WABetaInfo தெரிவித்துள்ளது. இந்த புதிய விருப்பம் பயனர்கள் தங்கள் திரையின் உள்ளடக்கத்தை அழைப்பில் உள்ள அனைவருடனும் பகிர அனுமதிக்கும்.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது, பயனர்களின் திரையில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் – அறிவிப்புகள் உட்பட – படம்பிடிக்கப்பட்டு வீடியோ அழைப்பில் இணைக்கப்பட்டவர்களுடன் பகிரப்படும். வீடியோ அழைப்பின் போது திரையின் உள்ளடக்கத்தைப் பகிரும் திறன் சில பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் வரும் வாரங்களில் இன்னும் அதிகமான பயனர்களுக்கு இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
வீடியோ மெசேஜ் அம்சம்:
இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில், iOS மற்றும் Android இல் உள்ள சில பீட்டா சோதனையாளர்களுக்கு செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப் ஒரு புதிய வீடியோ செய்தி அம்சத்தை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சம் பீட்டா பயனர்களுக்கு வீடியோ செய்திகளை பதிவு செய்து அனுப்பும் வசதியை வழங்குகிறது. பெறுநர்கள் ஒரு வீடியோ செய்தியைப் பெறும்போது அது சமீபத்தில் பதிவுசெய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது அதன் நம்பகத்தன்மையை பெரிதும் அதிகரிக்கும்.
முதலில் வாட்ஸ்அப்பில் தட்டச்சு, அதாவது டைப் செய்து மெசேஜ் அனுப்பும் வசதிதான் இருந்தது. அதன் பின்னர் வாய்ஸ் மெசேஜுக்கான வசதி அளிக்கப்பட்டது. ஒரு பயனரால் மெசேஜை டைப் செய்ய முடியவில்லை என்றாலோ, அல்லது அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, அவர் தான் பகிர விரும்பும் செய்தியை வாய்ஸ் மெசேஜ் மூலம் பேசி ஆடியோ மெசேஜ்களை எளிதாக அனுப்பலாம்.
இப்போது இந்த ஆடியோ மெசேஜ் அம்சம் மேலும் மேம்பட்டுள்ளது. ஏனெனில் இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் தொடர்புகளால் மெசேஜ்களை பார்க்கவும் கேட்கவும் முடியும். ஏற்கனவே iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்பட்ட வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட்டுடன் இந்த அம்சம் வருகிறது.
வாட்ஸ்அப் சேட் லாக் அம்சம்
வாட்ஸ்அப் அதன் சேட்லாக் அம்சத்தை அனைவருக்கும் வெளியிட்டுள்ளது. இப்போது அது பயனரின் ப்ரொஃபைல் பிரிவில் காணப்படும். இந்த அம்சத்தின் உதவியுடன், எந்தவொரு குறிப்பிட்ட சேட்டையும் பயனர்கள் லாக் செய்ய முடியும். அதன் மூலம் அதை யாரும் செக் செய்ய முடியாது. சில காரணங்களால் உங்கள் மொபைல் ஃபோனை வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். இதனால் உங்கள் தனிப்பட்ட செய்திகளை வேறு யாரும் படிக்காமல் இருப்பார்கள்.
புதிய வாட்ஸ்அப் சேட் லாக் அம்சம் சேட் உள்ளடக்கத்தை அறிவிப்புகளிலிருந்தும் (நோடிஃபிகேஷங்களிலிருந்து) மறைக்கும். அதாவது, உங்கள் ப்ரைவசி முற்றிலும் பாதுகாக்கப்படும். நீங்கள் ஒரு செய்தியைப் பெற்றதாக அறிவிப்பைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் பிளாட்பார்மிற்குச் செல்லும்போது, புதிய செய்தி எதையும் நீங்கள் காண மாட்டீர்கள், ஏனெனில் அது பூட்டப்பட்ட கோப்புறையில் (லாக்ச் ஃபோல்டர்) இருக்கும்.காப்பகப்படுத்தப்பட்ட செய்தி (ஆர்கைவ்ட் மெசேஜ்) மேலே தோன்றுவது போல், லாக் செய்யப்பட்ட சேட்டும் சேட் செக்ஷனில் மேலே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.