இரவு முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெக்கையை போக்கும் விதமாக நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல்
பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) ஒரு நாள் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னையில் சில சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 13.7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.