நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோடோகார்ப் எலக்ட்ரிக் பிராண்டு வீடா குறிப்பிட்ட சில மாநகரங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நகரங்களில் விரிவுப்படுத்துவதுடன் கூடுதலாக மாறுபட்ட ரேஞ்சு, டிசைன் கொண்ட பல்வேறு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் சுமார் 100க்கு மேற்பட்ட டீலர்களை துவங்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஹீரோ வீடா ஸ்கூட்டர் சென்னை, கோவை என இரு மாநகரங்களில் மட்டும் கிடைக்கின்றது.
வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹீரோ நிறுவனம் வீடா பிராண்டில் மூன்று விதமான ஷோரூம்களை திறக்கவுள்ளது. அவை விடா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், விடா ஹப் மற்றும் விடா பாட் ஆகும். இதன் மூலம் நாடு முழுவதும் விரைவாக டீலர்களை துவங்க முயற்சிகளை இந்நிறுவனம் எடுத்த வருகின்றது.
100க்கு மேற்பட்ட டீலர்கள் துவங்கிய பிறகு படிப்படியாக பல்வேறு நகரங்களில் தொடர்ந்து விரிவுப்படுத்தவும் உள்ளது.
தற்பொழுது ஒற்றை விடா வி1 ஸ்கூட்டர் மட்டும் விற்பனையில் உள்ள நிலையில், கூடுதலாக பல்வேறு டிசைன மாறுதல்கள் கொண்ட ஸ்கூட்டர்கள், மாறுபட்ட ரேஞ்சு, குறைந்த விலை ஸ்கூட்டர் என பலவற்றை 2025 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.