சென்னை : சரத்குமாரின் மூத்த மகள் ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார்.
இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரேயான்: இந்தநாளில் அப்பா மீது அதீத பாசம் கொண்டவர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், எம்.ஆர் ராதாவின் மகளும் நடிகையுமான ராதிகாவின் மூத்த மகள் ரேயான். தனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவ்வப்போது தனது அம்மா ராதா மற்றும் சரத்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம்: நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ராதிகாவின் மூத்த மகள் ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரத்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வந்த மனிதர். நீங்கள் எங்களுக்காக செய்யும் எல்லாவற்றுக்கும் நன்றி. முக்கியமாக எங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்காகவும் நாங்கள் வீழும்போது எங்களை தூக்கிவிடுவதற்காகவும்.
தங்க இதயம் கொண்ட என் அப்பா: வாழ்க்கையில் நாம் எத்தனை முறை சரிந்தாலும் முயற்சிகளைக் கைவிடாமல் இருக்கவும், தோல்வி என்பது சகஜமான ஒன்று என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காகவும் நன்றி. தங்க இதயம் கொண்ட என் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என உருக்கமாக ரேயான் பதிவிட்டுள்ளார். மகள் ரேயானின் இந்த பதிவிற்கு சரத்குமார், “நீ எப்போதும் என் மீது பொழியும் அன்புக்கும் நன்றி ரே” என பதிலளித்துள்ளார். இவர்கள் இருவரின் இந்த உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்: ராதிகா, சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான் கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, தாரக் மகனும், ராத்யா மிதுன் என்ற மகளும் இருக்கிறார்.