சென்னையில் இன்று (ஜூன் 19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 137.6 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 67.4 செ.மீ மழை பெய்துள்ளது. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூன் மழைஇதையடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தலைநகர் சென்னையில் ஜூன் மாதம் மழை பெய்வது அரிதான நிகழ்வாகும். கடைசியாக 27 ஆண்டுகளுக்கு முன்னர் கனமழை பெய்தது. அதாவது, 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ மழை பதிவாகியிருந்தது. ஏனெனில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை என்பது மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தான் மழையை தரும்.மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புவெதர்மேன் போட்ட பதிவுசென்னையில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. நடப்பாண்டு மழை கொட்டித் தீர்த்து சென்னையில் ஆச்சரியம் அளித்துள்ளது. நடப்பு ஜூனில் இதுவரை 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதம் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
96க்கு பின்னர்1996ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது. அந்த சமயத்தில் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது கவனிக்கத்தக்கது. 1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
சென்னையில் மழைப்பொழிவுமேகங்கள் நகரும் நிகழ்வுபல்வேறு இடங்களில் 100 மி.மீ அளவை தாண்டி மழை பெய்திருக்கிறது. இதற்கு மேகங்கள் கடற்பகுதியில் இருந்து நகர்வதே முக்கிய காரணம். முன்னதாக வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் தாக்கி வந்தன. அதை சமன் செய்யும் வகையில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கடற்பகுதியில் இருந்து மேகங்கள் நகரும் நிகழ்வு என்பது ஒரு கனவு போலத் தான் உள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறைசென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஆற்காடு, கலவை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
27 ஆண்டுகளுக்கு பின்னர்அடுத்த 3 மணி நேரத்திற்குமேலும் மதுராந்தகம், நெமிலி, திருக்கழுகுன்றம், உத்திரமேரூர், வாலாஜாபேட்டை பகுதிகளிலும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அரக்கோணம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், வண்டலூர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.