சென்னை: கடந்த 2005ம் ஆண்டில் வெளியான படம் அந்நியன். இந்தப் படம் நடிகர் விக்ரம் -இயக்குநர் ஷங்கர் காம்பினேஷனில் வெளியானது.
விக்ரமுடன் சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பிரம்மாண்டமான இந்தப் படத்தை தயாரித்திருந்தார் ஆஸ்கர் வி ரவிச்சந்திரன்.
மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் இந்தப் படத்தில் கலக்கலான நடிப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படம் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்ததையொட்டி நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவை பகிர்ந்துள்ளார்.
18 ஆண்டுகளை கடந்த அந்நியன் படம்: நடிகர்கள் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் பின்னர், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது. பிரான்சில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் அந்நியன் படத்திற்கு உண்டு.
இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருந்தார். அவருக்கு மல்டிபிள் டிஸ் ஆர்டர் என்ற நோய் இருப்பதாக காட்டப்பட்டிருந்தது. இதையொட்டி அம்பியாக இருக்கும் அவர் ரெமோ மற்றும் அந்நியன் என இருவேறு கேரக்டர்களை பெற்று, அந்த வாழ்க்கையையும் வாழ்வதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. அம்பியாக இருந்து நாயகி நந்தினியை காதலிக்கிறார். ஆனால் அவரது கேரக்டரால் அவரது காதல் நிராகரிக்கப்படுகிறது.
இதையடுத்து அவர் ரெமோவாக மாறி நந்தினியை தன்வசப்படுத்துகிறார். அவர் யார் என்ற உண்மை தெரியாமல் அவரை காதலிக்கிறார் நந்தினி. இதனிடையே, அந்நியனாக, கருட புராணத்தின்படி கெட்டவர்களை பழி தீர்க்கிறார் அம்பி. இறுதியில் அவருக்கு தண்டனை கிடைத்ததா என்பதாக கதை நிறைவடையும். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 18 ஆண்டுகளை கடந்துள்ளது. குறைவான பட்ஜெட்டில் நிறைவான படத்தை கொடுத்திருந்த இயக்குநர் ஷங்கர், இத்தகைய படங்களின்மூலம்தான் தன்னை முன்னணி இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படம் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்ததையொட்டி படத்தின் நாயகன் விக்ரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். நம் எல்லாருக்குள்ளயும் இருக்கான்ல, ஒரு அந்நியன் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 18 yrs of anniyan என்ற டேக்கையும் இணைத்துள்ளார். லவ் எமோஜியையும் இணைத்துள்ளார். மேலும் அந்நியன் படத்தின் வீடியோ ஒன்றையும் இந்த பதிவில் அவர் சேர்த்துள்ளார்.
நம் எல்லாருக்குள்ளையும் இருக்கான் இல்ல?
ஒரு அந்நியன்?!#18yrsofanniyan.
💛 pic.twitter.com/HdtBCnBds0— Vikram (@chiyaan) June 18, 2023
விக்ரமிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த அந்நியன், ஐ போன்ற படங்கள் முக்கியமானவை. அந்த வகையில் அவரது அந்நியன் படம் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துவரும் விக்ரம், 18 ஆண்டுகளை பூர்த்தி செய்த அந்நியன் படத்தின் கொண்டாட்டத்திற்கும் பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை கவரும் விஷயமாகவே அமைந்துள்ளது.