சென்னை: தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்று பள்ளிகள் தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களிலும் 12ஆம் வகுப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் விடுபட்ட மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடைபெறுகிறது.