எடப்பாடியின் 50, 50 டீலிங் டென்ஷன்… அதிமுக மா.செ.,க்களுக்கு விட்ட செம ரெய்டு!

அதிமுகவின் அதிகாரமிக்க நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவி எடப்பாடி வசமிருக்கிறது. இதனை ஜெயலலிதா ஸ்டைலில் நிரந்தர பொதுச் செயலாளராக மாற்ற வியூகங்கள் வகுத்து வருகிறார். தற்போதைய சூழலில் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் சாதகமான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது. இதனுடன் டெல்லியின் ஆதரவும் சேர்ந்து சற்றே பலத்தை கூட்டியுள்ளது.

எடப்பாடிக்கு இரண்டு சிக்கல்ஆனால் இரண்டு விதமான சிக்கல்களை எடப்பாடியை பின் தொடர்ந்து வருகின்றன. ஒன்று, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் செயல்பாடுகள். இரண்டாவது, கட்சிக்குள் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவது. இதில் கட்சிக்குள் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அப்படியென்ன கட்சிக்குள் சிக்கல்கள் என்ற கேள்வி எழலாம்.
அதிமுகவில் வீசும் அனல்மாவட்ட செயலாளர்கள் பலரும் சொல் பேச்சு கேளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக தீவிர செயல்பாட்டை முன்னெடுக்க கட்சியின் சீனியர்கள் எடப்பாடிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுதவிர தென் மாவட்ட வாக்கு வங்கி அரசியலில் சாதகமான நிலை ஏற்படாதது. இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. உதாரணமாக ஒரு விஷயத்தை கூறலாம்.​
​​மாவட்ட செயலாளர்கள் கூட்டம்கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க சொல்லி பல மாதங்கள் ஆகிவிட்டன. இதில் மாவட்ட செயலாளர்கள், மாஜி அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த விஷயத்திற்காகவே ஏப்ரல் 20, மே 17, ஜூன் 13 என மூன்று முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். ஆனாலும் சுணக்கம் காணப்படுவதாக தெரிகிறது.உறுப்பினர் சேர்க்கை என்னாச்சு?குறிப்பாக சென்னையில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, விருகை ரவி, அசோக், வெங்கடேஷ் பாபு ஆகியோர் இன்னும் 50 சதவீத உறுப்பினர்கள் சேர்க்கையை கூட நிறைவு செய்யவில்லையாம். அப்படியெனில் எஞ்சிய 50 சதவீத இலக்கை எப்போது பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.மாஜிக்களும் அலட்சியம்இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பின் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. விஷயம் தெரிந்ததும் எடப்பாடி செம டென்ஷனாகி விட்டார். கடைசியாக நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரெய்டு விட்டாராம்.​
​​​தேர்தல் நெருங்குகிறதுஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அதை மனதில் வைத்து செயல்படுங்கள் என மீண்டும் ஒருமுறை மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். நீங்கள் சுணக்கம் காட்டினால் தேர்தல் முடிவுகளில் பெரிய சிக்கலை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே சீரியசாக சொன்ன வேலையை செய்யுங்கள் என்று கறார் காட்டியுள்ளதாக அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.