நாட்டில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம்

நாட்டில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய நிலையங்களில் கிடைக்கும் யூரியா உரங்களுக்கு மேலதிகமாக 5,100 மெற்றிக் தொன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது. இன்று (19) மேலும் 1,000 மெற்றிக் தொன் யூரியா விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 200 மெற்றிக் தொன் (19) யூரியா உரத்தை பொலன்னறுவைக்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கடந்த வாரம் முதல் பொலன்னறுவைக்கு அனுப்பப்பட்ட யூரியா உரத்தின் அளவு 500 மெற்றிக் தொன்னைத் கடந்துள்ளது.

விவசாய சேவை நிலையங்களில் போதியளவு யூரியா உரம் உள்ளதால் உர நிறுவனங்கள் யூரியா உரத்தை அனுப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கலாநிதி ஜகத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில விவசாய அமைப்புகள் யூரியா உரம் கிடைக்கவில்லை என ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இதை கருத்திற்கொண்டு அரசாங்க உர நிறுவனங்களின் அதிகாரிகளை இருவரை நியமித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, மேலதிக தகவல்களை 0775510674 என்ற தொலைபேசி இலக்கத்தில் கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு உபேந்திரா மற்றும் 0774441417 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு லங்கா உர நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் திரு நுவன் ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.