சென்னை: ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் நடிகை தமன்னா நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்துள்ளதால் அது ஜெயிலர் படத்தை பாதிக்கும் என்று சினிமா பிரபலம் ஒருவர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார்.
தற்போது அவருக்கு தமிழில் படவாய்ப்பு குறைந்ததால், பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, அங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
ஜீ கர்தா வெப் தொடர்: நடிகை தமன்னா நடிப்பில் ஜீ கர்தா என்கிற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடரில் ஆபாச வசனங்கள், முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என படு ஆபாசமாக உள்ளது. இந்த வெப் தொடரைப் பார்த்த பலரும் இது என்ன ஆபாச படம் மாதிரி இருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நிர்வாண காட்சி: இதில் இடம்பெற்றுள்ள நிர்வாண காட்சியில் நடிகை தமன்னா கதாநாயகனுடன் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்த வெப் தொடரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தமன்னா ஏன் இப்படி ஆபாச நடிகையாக மாறிவிட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில் நடித்து வருவதால், இது நிச்சயம் ஜெயிலர் படத்தை பாதிக்கும் என்று படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
பணம் கொடுத்தால் போதும்: இந்நிலையில், சினிமா விமர்சகரான வலைப்பேச்சு பிஸ்மி அளித்துள்ள பேட்டியில், பொதுவாக நடிகைகளுக்கு சமூக பொறுப்பு எப்போதுமே இருந்தது இல்லை, அவர்களுக்கு பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள். கடந்த காலங்களில் பல நடிகைகள் அப்படி நடித்ததை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், தமன்னாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இது போன்ற வெப் தொடரில் அவர் நடித்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ரசிகர்கள் கவலை: இது ஜெயிலர் திரைப்படத்தை நிச்சயம் பாதிக்கும், இது சினிமா தானே இது வேறப்படம், அது வேறப்படம் என்று ரசிகர்கள் பிரித்துப்பார்க்க மாட்டார்கள். மேலும், ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு குடும்பபாங்கான கதாபாத்திரம் இருக்கும் என்றால், அந்த ஆபாச காட்சி ரசிகர்களின் கண் முன் வந்து படத்தை பாதிக்கும் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனால், ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.