Twitter Video App ஒன்றை உருவாக்கிவரும் எலன் மஸ்க்! யூடியூபிற்கு போட்டியாக புது செயலி

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உலகளவில் தேடலில் பல ஆண்டுகளாக Google நிறுவனம் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதேபோல வீடியோ உருவாக்கத்தில் Youtube நிறுவனம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் தலத்தை குறிவைத்து விரைவில் Twitter நிறுவனம் ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை உருவாக்கிவருகிறது. ஏற்கனவே ஸ்மார்ட் டிவி பலவற்றில் Youtube ஆப் இருப்பது போல ட்விட்டர் நிறுவனமும் ஒரு பிளாட்போர்ம் உருவாக்கிவருகிறது.

Amazon Prime Lite 999ரூ சந்தா திட்டம் இந்தியாவில் அறிமுகம்!

Twitter Video App

சமீபத்தில் ட்விட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு Twitter video app விரைவில் வரப்போவதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த பயனர் ‘தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேல் ட்விட்டரில் வீடியோ பார்க்கமுடிவதில்லை என்றும் ஸ்மார்ட் டிவியில் தனியாக ட்விட்டர் வீடியோ ஆப் தேவை’ என்று கூறியுள்ளார். அதற்கு ‘It’s Coming’ (வருகிறது) என்று ட்வீட் மூலம் எலன் மஸ்க் பதிலளித்துள்ளார்.

நீண்டநேர வீடியோ

கடந்த மாதம் ட்விட்டரில் 2 மணிநேரம் வீடியோ பதிவேற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தனர். இந்த வசதி கிடைத்ததும் பல பயனர்கள் ‘John Wick Chapter 4’ போன்ற படங்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தனர்.

Vi 365 Plans: ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் எந்த கவலையும் இல்லை!

இப்போது உண்மையிலேயே வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியை ட்விட்டர் அறிமுகம் செய்கிறது. இனி பயனர்கள் ட்விட்டர் பயன்படுத்தும்போதே வீடியோ பார்க்கவும் 15 நொடிகள் முன்னும் பின்னும் மாற்றும் வசதியும் கிடைக்கும்.

வீடியோவிற்கு அதிக முக்கியத்துவம்

இதற்கென வீடியோ கிரியேட்டர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் போன்றவர்களிடம் ட்விட்டர் நிறுவனம் இணைந்து வீடியோ உருவாக்கவுள்ளது. மேலும் தனிப்பட்ட விளம்பரங்கள், செய்திகள் உருவாக்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம் வேலை செய்யும் என்று அதன் தலைவர் லிண்டா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.