இந்தியாவின் முக்கியமான உளவு அமைப்பு ரா (RAW). இது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (Research and Analysis Wing) சுருக்கமே ஆகும். இதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக செயலாளர் பதவி இருக்கிறது. இதில் சமந்த் குர்னார் கோயல் தற்போது பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் வரும் ஜூன் 30ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய செயலாளராக ரவி சின்ஹாவை நியமித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இவர் 1988ஆம் ஆண்டு சட்டீஸ்கர் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.