KTM 200 Duke – 2023 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது

எல்இடி ஹெட்லைட் பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் பைக் விற்பனைக்கு ரூ.1.96 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3,100 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

390 டியூக், 250 டியூக் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருக்கின்ற அதே எல்இடி விளக்கை பகிர்ந்து கொள்ளுகின்றது. பல்சர் என்எஸ் 200, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

2023 KTM 200 Duke

BS6 2 ஆம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணக்கமான OBD2 மற்றும் E20 உடன் கேடிஎம் 200 டியூக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 200cc லிக்விட்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. மேலும், டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் WP யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் WP மோனோஷாக் கொண்டதாக வந்துள்ளது.. பைக் மாடலில் 300 மிமீ முன் டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குடன் உள்ளது.

முந்தைய ஹாலஜென் ஹெட்லைட்டிற்கு பதிலாக, எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

ktm 200 duke

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.