சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு செயலாக்கத் திட்டத்துறைச் செயலாளராகவும், வீர பிரதாப் சிங், வணிகவரி துறை இணை ஆணையராக நியமனம் செய்யய்ப்பட்டுள்ளனர். ஆசி மரியம், சிறுபான்மை துறை ஆணையராகவும், சந்திரசேகர் சக்மூரி பட்டுப்புழு வளர்ச்சித் துறை இயக்குனராக நியமனம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.