இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ரயில்வே திகழ்கிறது. பல லட்சம் ஊழியர்கள், பல்லாயிரக்கணக்கில் சிக்கலான ரயில் தண்டவாளங்கள், தினசரி பல கோடி பேர் பயணம், கோடிக்கணக்கில் வருவாய் என முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ரயில்வே துறையின் பல்வேறு அம்சங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் ரயில் டிக்கெட்
அந்த வகையில் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளமும், யுடிஎஸ் (UTS) மொபைல் ஆப்பும் முக்கியமானவை. ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெற யுடிஎஸ் மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம். இவை அனைத்தும் டிஜிட்டல் டிக்கெட்களாக பெறப்படும். மொபைல் போன் வழியாகவே டிக்கெட் பரிசோதகர்களிடம் காண்பித்து பயணம் செய்யலாம்.
யுடிஎஸ் மொபைல் ஆப்
இதில் யுடிஎஸ் மொபைல் ஆப் சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முதலில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது தென்னிந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இந்திய ரயில்வே ஏற்பாடு
யுடிஎஸ் மொபைல் ஆப்பை பொறுத்தவரை இந்திய ரயில்வே மற்றும் CRIS எனப்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இது ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐஓஎஸ் என பல்வேறு வெர்ஷனில் செயல்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லா ரயில் பயண டிக்கெட் மட்டுமின்றி, பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றையும் பெறலாம்.
ஜாலியான பயணம்
ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிக்கக்கூடிய மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில் யுடிஎஸ் மொபைல் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் ஆப் மூலம் முன்பதிவில்லாத டிக்கெட்களை பெறுவதன் மூலம் பேப்பர் பயன்பாடு குறைவது மட்டுமின்றி, சிரமமில்லாத ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
யுடிஎஸ் மொபைல் ஆப் மூலம் பேப்பர்லெஸ் டிக்கெட் எப்படி பெறுவது?