இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் வரவிருக்கும் மாருதி சுசூகி இன்விக்டோ காருக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது.
இன்னோவா கிரிஸ்டா கார்களுக்கு அதிகப்படியான முன்பதிவை டொயோட்டா பெற்றுள்ளதால், இன்விக்டோ விற்பனைக்கு வரவுள்ளது.
மாருதி சுசூகி இன்விக்டோ
172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இன்விக்டோ கார் ஹைபிரிட் என்ஜின் பெற்றதாக மட்டுமே விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
தோற்ற அமைப்பில் முன்புற கிரில் மட்டுமே மாற்றம் பெற்றிருக்கும். மற்றபடி இன்டிரியர் உட்பட அனைத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் டொயோட்டா லோகோவிற்கு மாற்றாக சுசூகி லோகோ மட்டும் இடம்பெற்றிருக்கும்.
நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள மாருதி இன்விக்டோ விலை ரூ.20 லட்சத்தில் துவங்கலாம்.