நியூடெல்லி: ரோஹித் டெஸ்ட் கேப்டன் என்ற நிலையில் இருந்து மாற்றப்படுவார் என இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா உறுதியாக சொல்கிறார், அப்படி என்றால், ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியில் இடம் பெறுவாரா? அதை மட்டும் சொல்லமாட்டேன் என்று சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மூன்றாவது சுழற்சி ஏற்கனவே இங்கிலாந்தில் பரபரப்பான ஆஷஸ் தொடருடன் தொடங்கியது. முந்தைய இரண்டு சுழற்சிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தியா, முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்றது.
இதனை அடுத்து, அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய விளையாடவிருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் 2023/25 WTC சுழற்சிக்கு முன்னால் உள்ள முதன்மை கேள்வி ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்ஷிப்பின் எதிர்காலம்.
இது தொடர்பாக பிசிசிஐ தேர்வாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, 2023க்கு பிறகு ரோஹித் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்.
“ரோஹித் சர்மா ஒரு நல்ல கேப்டன். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை, விளையாட்டின் துடிப்பை புரிந்துகொள்கிறார், பொதுவான தவறுகளை செய்யமாட்டார். அவர் மிகவும் ஒழுக்கமானவர். எனவே, என்னுடைய கேள்வி ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பற்றியது அல்ல. இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும்போது, மைதானத்தின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ரோஹித் ஷர்மா, அணியின் திட்டமிடலில் தனது பங்கை ஆற்றியிருப்பார். அதேபோல, விராட் கோஹ்லியும் தற்போது யோசானைக் கூறும் குழுவில் இடம் பெற்றிருப்பார்.எனினும், டாஸ் போடுபவர்களிடமே முழுப் ப்பொறுப்பு உள்ளது. முன்பு எல்லா பொறுப்பும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி மீது இருந்தது. அதேபோல, இப்போது கவனம் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மீது உள்ளது என்பதே சோகமான உண்மை” என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
“ரோஹித் ஒரு நல்ல கேப்டன், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ரோஹித் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்டர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் எதிர்காலம் இப்படியே இருக்குமா என 100% உறுதியாக சொல்ல முடியாது, ஏனென்றால் உலகக் கோப்பையின் கடந்த இரண்டு சுழற்சிகளில் இறுதிப் போட்டியிலும் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை, உண்மையில் அவரது வயது அதிகம் என்பதுதான் நிதர்சனம்.அடுத்த இரண்டு வருடங்கள் மற்றும் மற்றொரு WTC சுழற்சி – 2025ஐப் பார்க்கும்போது, ரோஹித் சர்மா இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினாலும், அது இன்னும் ஆறு தொடர்களை விட அதிகமாக இருக்காது.” என்று அவர் கூறினார்.
புதிய சுழற்சியில் இந்தியாவின் WTC அட்டவணை மற்றும் அணியை வழிநடத்த வேறு ஒரு கேப்டனை தேட வேண்டியதன் அவசியத்தை சோப்ரா BCCI தேர்வாளர்களுக்கு வலியுறுத்துகிறார்.
“2023 ஆம் ஆண்டு இறுதிக்குள், அதாவது தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது, தேர்வுக்குழு, அடுத்த WTC இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் உள்ளன. பிறகு ஆஸ்திரேலியா செல்ல வேண்டும், எனவே இந்திய டெஸ்ட் அணியின் தலைமைக்கான மாற்றத்தைத் தேட வேண்டும். உண்மையில் இது ஒரு சுவாரசியமான ஒன்றாக இருக்கும்,” என ஆகாஷ் சோப்ரா கூறுகிறார்.