ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவில் OTT சேவையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் ஒரே நிறுவனம் Airtel மட்டுமே. ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் Amazon Prime Video , Disney+Hotstar ஆகிய OTT திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது. இதனுடன் அன்லிமிடெட் காலிங், 5G டேட்டா என கூடுதலாக பல வசதிகள் இதனுடன் கிடைக்கும்.
359 ரூபாய் திட்டம்
இதில் SonyLIV, Eros Now, Lionsgate Play என 15க்கும் மேற்பட்ட OTT தளங்கள் கொண்ட Airtel XStream Play சேவை கிடைக்கிறது. இதுதவிர இதில் ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100SMS வசதி, 2GB தினசரி டேட்டா, Apollo 24/7, இலவச 5G டேட்டா கிடைக்கிறது.
399 ரூபாய் திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த திட்டம் மூலம் அன்லிமிடெட் காலிங் வசதி, 100SMS, ஒரு நாளைக்கு 3GB டேட்டா, 15 OTT வசதியுடன் கூடிய Airtel Xstream Play சேவை கிடைக்கும்.
499 ரூபாய் திட்டம்
இந்த திட்டமும் 399 ரூபாய் திட்டத்தின் அதே வசதிகள் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் கூடுதலாக Disney+ Hotstar Mobile சேவையை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
BSNL Broadband Plans: ரூ.329 முதல் 1TB டேட்டா உடன் BSNL அளிக்கும் பிராட்பேண்ட் திட்டங்கள்
699 ரூபாய் திட்டம்
மொத்தம் 56 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த திட்டம் மூலமாக ஒரு நாளைக்கு 3GB தினசரி டேட்டா பயன்படுத்தலாம். மேலும் ஒரு நாளைக்கு 100 SMS வசதி, Airtel Xstream Play மற்றும் 56 நாட்கள் Amazon Prime வசதி கிடைக்கும்.
839 ரூபாய் திட்டம்
இதில் ஒரு நாளைக்கு 2GB தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS வசதி, 5G வசதி, 3 மாதங்களுக்கு Disney+Hotstar Mobile, Airtel Xstream Play வசதி கிடைக்கும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
Vi 365 Plans: ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் எந்த கவலையும் இல்லை!
999 ரூபாய் திட்டம்
இதன் மூலம் 84 நாட்களுக்கு இலவச 5G டேட்டா, Airtel Xstream Play சேவை, Amazon Prime வசதி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா தினசரி பயன்படுத்தலாம்.
3359 ரூபாய் திட்டம்
மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 2.5GB தினசரி டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100SMS வசதி, இலவச 5G டேட்டா, ஒரு வருடத்திற்கு Disney+Hotstar Mobile வசதி, Apollo 24/7 போன்ற சேவைகள் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்