ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Vairamuthu Tweet: கலைஞர் நூற்றாண்டு கவியரங்கிற்கு தலைமை ஏற்க திருவாரூர் செல்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. இந்நிலையில் ட்விட்டரில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
கலைஞர் நூற்றாண்டு விழாமறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு கவியரங்கு நாளை நடக்கவிருக்கிறது. அதற்கு கவிப்பபேரரசு வைரமுத்து தலைமை ஏற்கிறார். இது குறித்து அவர் உருக்கமாக ட்வீட் போட்டுள்ளார்.விஜய்”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!வைரமுத்து உருக்கம்வைரமுத்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நாளை
கலைஞர் நூற்றாண்டுக்
கவியரங்கில்
தலைமையேற்கிறேன்
இன்று
திருச்சி வழியே
திருவாரூர் செல்கிறேன்
மாலை
திருக்குவளை சென்று
கலைஞர் பிறந்த
வரலாற்று மண்ணை
வணங்குகிறேன்
தாயில்லாத
கூட்டைத்தேடும் பறவைபோல்
நீயில்லாத
வீட்டைத்தேடி வருகிறேன்
நீரூறும் கண்களோடு
#கலைஞர்100 #kalaiganr100 என தெரிவித்துள்ளார்.
வைரமுத்து ட்வீட்ரசிகர்கள் வாழ்த்துகலைஞரின் நன்மதிப்பை பெற்றவர் வைரமுத்து. இந்நிலையில் கலைஞர் பிறந்த ஊருக்கு செல்வது குறித்து அவர் உருக்கமாக போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், திமுகவினரும் கூறியிருப்பதாவது, உங்களின் வேதனை புரிகிறது. கலைஞர் நூற்றாண்டு கவியரங்கிற்கு தலைமை தாங்க உங்களை விட சிறந்த ஆள் யாரும் இருக்க முடியாது. திருவாரூரில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம். அன்று கலைஞர் தலைமையில் கவிதை வாசித்தீர்கள். இன்று கலைஞர் நூற்றாண்டு விழா கவியரங்கிற்கு தலைமை ஏற்கிறீர்கள். வாழ்க என தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துப் பாடல்கலைஞர் கருணாநிதியை பற்றி புகழ்ப்பாட்டு எழுதியிருக்கிறார் வைரமுத்து. அந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், யாசின் பாடியிருக்கிறார். இருக்கின்றார் இருக்கின்றார் கலைஞர் இருக்கின்றார் என்கிற அந்த பாடலின் மேக்கிங் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் வைரமுத்து. மேக்கிங் வீடியோ திமுக ஆதரவாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கலைஞருக்காக பாடல் எழுதிய வைரமுத்துவை பாராட்டினார்கள்.
Vairamuthu: வைரமுத்துவை பாராட்டும் திமுக ஆதரவாளர்கள்: காரணம் அந்த வைரல் வீடியோ
மன்னிப்பு கேளுங்கள்ரசிகர்களும், திமுகவினரும் வைரமுத்துவை வாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூக வலைதளவாசிகளோ அவரை மன்னிப்பு கேட்குமாறு கூறி வருகிறார்கள். உங்கள் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் நிஜமாகவே கலைஞரை மதிப்பவராக இருந்தால் அந்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் கவிஞரே என தெரிவித்துள்ளனர்.
புவனா சேஷன்வைரமுத்துவால் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பாடகி புவனா சேஷன் அண்மையில் தெரிவித்தார். தனக்கு நடந்தது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பேசுவதாக மேலும் தெரிவித்தார். வைரமுத்துவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயியின் தைரியத்தை பாராட்டினார் புவனா.
வைரமுத்துவால் நானும் பாதிக்கப்பட்டேன், எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது: பாடகி புவனா சேஷன்
நடவடிக்கை எடுக்கப்படுமா?17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சார்பிலும், தன் சார்பிலும் சின்மயி நியாயம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். பெண்களுக்கு தொல்லை கொடுத்த வைரமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லையா என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Kamal Haasan: கமலுக்காக கெத்து வில்லனை தேர்வு செய்த ஹெச். வினோத்: ஆண்டவருக்கு ஏத்த ஆளு தான்