இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமான துலிப் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தெற்கு அணி, வடக்கு அணி, கிழக்கு அணி என 6 அணிகள் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் ரஞ்சிக் கோப்பை மற்றும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இடம்பெறவில்லை. இந்த நிலையில் துலிப் கோப்பையில் தனது பெயர் இடம் பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக தேஷ்பாண்டே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ நான் சிறந்த பார்மில் இருக்கிறேன். தொடர்ந்து 140 கி.மீ வேகத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறேன். அணியில் இடம்பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது. நான் மட்டுமல்ல, மேற்கு மண்டல அணியில் என் பெயரை அனைவரும் எதிர்பார்த்தனர். எனது பெயர் துலிப்கோப்பை இடம்பெறாதது சற்று ஏமாற்றம்தான்” என்று கூறியிருக்கிறார். துஷார் தேஷ்பாண்டேவை தேர்வு செய்யாதது குறித்த உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்