Lokesh kanagaraj: சினிமாவில் இருந்து விலகலாம் என முடிவெடுத்துள்ள லோகேஷ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகின்றார். தற்போது இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். என்னதான் இவர் நான்கே படங்கள் தான் இயக்கியிருந்தாலும் அந்த நான்கு படங்களும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் லோகேஷ் இயக்கிய நான்கு படங்களும் செம ஹிட்டடுத்துள்ளது. குறிப்பாக இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் தான் இவரை இந்தியளவில் பிரபலமாக்கியது.

Leo: ஷூட்டிங் பண்ணலாமா ? இல்லை கேன்சல் பண்ணிட்டு போய்டலாமா ?விஜய் கேட்ட கேள்வி..ஷாக்கான படக்குழு..!

அப்படத்திற்கு பிறகு இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இவரின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் தான் இப்படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இன்னும் பத்து நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கவுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இவ்வாறு பிசியாக இருக்கும் லோகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது லோகேஷிடம் LCU வை கொண்டு இன்னும் இருபது வருடங்களுக்கு படங்களை இயக்குவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஒரு பத்து படங்களை எடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகலாம் என இருக்கின்றேன் என கூறினார்.

இந்த பதில் ரசிகர்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது. தற்போது லோகேஷிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது. அவர் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பல படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் இவ்வாறு கூறியது அனைவர்க்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது

இருந்தாலும் லோகேஷின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து அவர் தன் முடிவை மாற்றுவார் என ரசிகர்கள் நம்பியுள்ளனர். லியோ படத்திற்கு பிறகு
கமல்
,சூர்யா உட்பட பல நடிகர்களை லோகேஷ் இயக்குவார் என் எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.