கடலூர்: கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நேருக்கு நேர் இரண்டு தனியார் பேருந்துக்கள் மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறித்துள்ளார்.