பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான், ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணி வீரர்களுடன் பீர் குடித்து கொண்டாடும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ரக்பி விளையாட்டு மிகவும் பிரபலமான ஒன்று. தலைநகர் பிரான்சில், ரக்பி சாம்பியன்ஷிப் கோப்பைக்கான உள்நாட்டு லீக் சுற்று போட்டியின் பைனல் போட்டி நடந்தது. இதில் டெளலோசியூஸ், மற்றும் லா ரூச்சிலி ஆகிய இரு வேறு கிளப் அணிகள் மோதின; இதில் டெளலோசியூஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியை காண வந்திருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான் , வெற்றியை கொண்டாடி மகிழந்தார். டெளலோசியூஸ் அணி வீரர்களுடன் இணைந்து, கொரோனா வகை பீரை குடித்து மகிழ்ந்தார். நாட்டின் அதிபராக இருப்பவர் பொது இடத்தில் பீர் குடிக்கும் வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டன விமர்சனம் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement