டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வெய்லர் போன்ற நாய்களை வளர்க்க எகிப்து அரசு தடை விதித்துள்ளது நாய் வளர்ப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ராட்வெய்லர் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் எகிப்து நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆபத்தானதாக கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசு தடை விதித்துள்ளது.
அவற்றை ஒரு மாதத்திற்குள் கால்நடை துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. குழந்தையை போல் வளர்த்த நாயை பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் உள்ள நாய் உரிமையாளர்கள், சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.