பெங்களூரு:
பெங்களூரு புறநகர் கலெக்டர்
கர்நாடக அரசு நேற்று 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வனம்-சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தருக்கு கூடுதலாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்ட கலெக்டர் சதீஸ், சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷா அறக்கட்டளை இயக்குனராகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள கோபாலகிருஷ்ணா, கர்நாடக நகராட்சிகள் தரவு சங்க இணை இயக்குனராகவும், ராஜீவ்காந்தி கிராமப்புற வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர் சிவசங்கர் பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அக்ரம் பாஷா கோலார் மாவட்ட கலெக்டராகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள கங்குபார் ரமேஷ் மனகர் மாநில தகவல் ஆணைய செயலாளராகவும், பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டர் லதா, கர்நாடக மகளிர் ஆணைய செயலாளராகவும், கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கட்ராஜா, குடகு மாவட்ட கலெக்டராகவும், கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டாளர் பவுசியா தரனும் கலபுரகி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணா மேலணை
காத்திருப்போர் பட்டியலில் உள்ள நாகராஜ் கர்நாடக எய்ட்ஸ் தடுப்பு சங்க திட்ட இயக்குனராகவும், கிருஷ்ணா மேலணை திட்ட பொது மேலாளர் பன்வர்சிங் மீனா, கலபுரகி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும், பெங்களூரு மாநகராட்சி மகாதேவபுரா மண்டல இணை கமிஷனர் லிங்கமூர்த்தி, கர்நாடக சாலை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கலபுரகி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி கிரிஷ் திலிப் படோலே, கர்நாடக அரசு பணியாளர் ஆணைய தேர்வு கட்டுப்பாட்டாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள நொங்ஜாய்மொட் அலி அக்ரம் பாஷா, ஹம்பி உலக பாரம்பரிய சின்ன நிர்வாக ஆணைய கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.