ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 125cc சந்தையில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் முதல் பிரீமியம் பைக் மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது.
தற்பொழுது கம்யூட்டர் சந்தையில் உள்ள கிளாமர் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 பைக்குகளை விட ஸ்போர்டிவ் தோற்ற அமைப்பில் ரைடர் 125, பல்சர் 125, எஸ்பி 125, உட்பட என்எஸ்125 மற்றும் 125 டியூக் மாடலை எதிர்கொள்ளும் வகையில் ஹீரோ இரண்டு பைக்குகளை 125சிசி சந்தையில் வெளியிட உள்ளது.
Hero Xtreme 125R
வரவிருக்கும் புதிய 125சிசி மாடல் மிக ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை பெற்று மிக கூர்மையான ஹெட்ல்டை அமைப்பில் எல்இடி விளக்குகள் இடம்பெற்றிருக்கலாம். அடுத்தப்படியாக, பெட்ரோல் டேங்க் பகுதியில் எக்ஸ்டென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இரு பிரிவுகளாக கொண்ட 6 ஸ்போக் 17 அங்குல அலாய் வீல், இரு பிரிவுகளை பெற்ற ஸ்பிளிட் இருக்கை, முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக் கொண்டு, எல்இடி டெயில் விளக்கு பெற்றுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள 125சிசி மாடல் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
சோதனை ஓட்டத்தில் உள்ள என்ஜின் தோற்ற கிளாமர் பைக்கில் உள்ளதை போன்றே தெரிந்தாலும், முற்றிலும் மாற்றிமைக்கப்பட்டு கூடுதல் பவர் மற்றும் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தலாம்.
ஹீரோ வெளியிட உள்ள முதல் பிரீமியம் 125 மாடல் அனேகமாக எக்ஸ்ட்ரீம் 125ஆர் என அழைக்கப்படலாம் அல்லது வேறு ஏதேனும் புதிய பெயரை பெற வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் பண்டிகை காலம் அல்லது வருட இறுதியில் விற்பனைக்கு கிடைக்கலாம்.
image source – mrd vlogs youtube