Ward Wizard showcases electric vehicles | மின்சார வாகனங்களை காட்சிப்படுத்திய வார்ட் விஸார்டு

பெங்களூரு ‘வார்ட் விஸார்டு’ நிறுவனம், அதன், ‘ஜாய் பைக்’ பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களையும், பெங்களூரில் நடந்து முடிந்த பசுமை வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.

குறிப்பாக, ‘ஜாய் இ – ரிக்’ என்ற புதிய மின்சார ஆட்டோவை, முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. அத்துடன், ஏற்கனவே சந்தையில் இயங்கி வரும், ‘மியோஸ்’ என்ற மின்சார ஸ்கூட்டரும், பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதுகுறித்து, ‘வார்ட் விஸார்டு’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யதின் குப்தா கூறியதாவது:

இந்தியா, மின்சார வாகன புரட்சியின் விளிம்பில் நிற்கிறது. அதனால், மின்சார வாகனங்களின் ஊடுருவலை துரிதப்படுத்த, முயற்சி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.