புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி
பிரதமர் மோடி
ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சிக்காக அவர் மேற்க்கொண்ட முயற்சிகளுக்காக அவர் போற்றப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு உணர்வு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறது. அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தேசத்திற்கும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சேவை செய்வதில் உங்கள் அர்ப்பணிப்பு ஊக்கம் அளிக்கிறது. நிர்வாக துறையிலும், பொதுச்சேவையிலும் உங்களின் அனுபவத்தின் பலனை நாடு பெறுகிறது. நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலனுடனும், மகிழ்ச்சியுடனும் பொது மக்களை உத்வேகப்படுத்த வாழ்த்துகள்.
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement