அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே: பிறந்தநாள் போஸ்டரில் செந்தில் பாலாஜியை குத்திக்காட்டிய விஜய் ரசிகர்கள்?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Thalapathy Vijay poster: விஜய்யின் பிறந்தநாளுக்காக மதுரையில் இருக்கும் தளபதி ரசிகர்கள் அடித்த போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

​விஜய் பிறந்தநாள்​விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு போஸ்டர்களை வெளியிடத் துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரை வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே என்று கூறி போஸ்டர் அடிப்பதை ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டும் அப்படி ஒரு போஸ்டரை அடித்திருக்கிறார்கள்.அரசியல்​”எல்லாருமே அரசியலுக்கு வரணும்” சரத்குமார் பேட்டி!​​போஸ்டரால் பரபரப்பு​அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டரில், அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே, ஆண்டவர்- ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வரே என்கிற வாசகம் அடங்கியிருக்கிது. இந்த போஸ்டரை அடித்தது பாசத்திற்கு பெயர் போன மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தான்.
​ஒன்னும் செய்ய முடியாது​Tamannaah: படுக்கையறை காட்சிகளில் நடித்தது ஏன்?: தமன்னாவின் விளக்கத்தால் ரசிகர்கள் கோபம்அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. போஸ்டரை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, யாருக்கும் அஞ்சாதவர் தளபதி. அமலாக்கத் துறையால் விஜய்ணாவை ஒன்றும் செய்ய முடியாது. காசு பணம் விஷயத்தில் விஜய்ணா ரொம்ப சுத்தமானவர். அதனால் அமலாக்கத்துறை அவரை பார்த்து வியக்கத் தான் வேண்டும். சரியகாத் தான் போஸ்டர் அடித்திருக்கிறார்கள். மதுரைக்காரங்க உண்மையை தான் சொல்லியிருக்காங்க என்கிறார்கள்.

​அப்பாவின் விளக்கம்​ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மகனின் பிறந்தநாளுக்கு வருங்கால முதல்வரேனு ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்களே என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் முன்பு கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, ரசிகர்கள் அப்படி போஸ்டர் அடிப்பதில் தப்பில்லை. அவர்களின் விருப்பத்தை போஸ்டர் மூலம் கூறுகிறார்கள் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

​அரசியல் ஆசை​விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் மட்டும் அல்ல எஸ்.ஏ. சந்திரசேகரும் தான் விரும்புகிறார். விஜய்க்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதனால் தான் மெதுவாக காய் நகர்த்தி வருகிறார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் தான் வருங்கால வாக்காளர்களான 10ம், 12ம் வகுப்பு மாணவ, மாணவியரை அழைத்து கவுரவித்திருக்கிறார் விஜய் என பேசப்படுகிறது.

​கல்வி விருது விழா​10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை அழைத்து கவுரவித்தார் விஜய். அப்பொழுது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. யோசித்து வாக்களிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சி முடிந்து கையில் சான்றுடன் வந்த மாணவி ஒருவரிடம், விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஓட்டு போடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். யாராக இருந்தாலும் யோசித்து வாக்களிப்பேன். அவர் யோசித்து வாக்களிக்கச் சொல்லியிருக்கிறார் என்றார்.

​Vijay: 12 மணிநேரம் கால் கடுக்க நின்ற விஜய்: ஸ்மைல், கண்ணீர், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தளபதி

​லியோ படப்பிடிப்பு​மாணவ, மாணவியரை கவுரவித்த விழாவில் 12 மணிநேரமாக மேடையில் நின்று கொண்டிருந்தார் விஜய். அதனால் ஒரு கட்டத்தில் சோர்வு தாங்க முடியாமல் மேஜையில் சாய்ந்துவிட்டார். இரவு 11.20 மணி வரை அந்த நிகழ்ச்சி நடந்தது. அப்படி இருந்தும் மறுநாள் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். அவரை செட்டில் பார்த்த படக்குழுவினர் வியந்துவிட்டார்கள். தளபதிக்கு தான் எவ்வளவு எனர்ஜி என்றார்கள்.

​விஜய் பேசக் கூடாதுனு சொல்லியும் அதை மேடையில் பேசிய மாணவியின் அப்பா: பத்த வச்சிட்டியே பரட்டை​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.