சென்னை: இளம் க்யூட் நடிகையான பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராமில் தனது டாட்டூவை தெரியவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
மலையாள நடிகையான பிரியா வாரியர் தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர், 3 Monkeys, Yaariyan 2, Movie Hacker, Vishnu Priya, Kolla, Live, Sridevi Bungalow என ஏராளமான படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
அடார் லவ் : இளம் க்யூட் நடிகையான பிரியா வாரியர், ஒரு அடார் லவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் புருவத்தை உயர்த்தியும், சுருக்கியும், கண் அடித்தும் உலகம் புகழ் பெற்றார். பருவப்பெண்ணாக இருந்த பிரியா வாரியர். அந்த படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்து இருந்தார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் ஏராளமான படங்களில் கமிட்டானார்.
கண் சில்மிஷம்: நடிகை பிரியா வாரியர் விதவிதமாக காட்டிய முக பாவத்தால், சொக்கிப்போன ரசிகர்கள் அந்த பெண்ணுக்கு ஹைலைட்டே அந்த கண்ணுதாய்யா என்று அனைவரும் ரசித்து ரசித்து வியந்து பார்த்து பாராட்டும் அளவுக்கு உச்சம் பெற்றது அந்த கண் சில்மிஷம்.
அடுத்தடுத்த படங்களில்: தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தெலுங்கில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். சந்திர சேகர் யேலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் செக் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார். அதன் பின் மலையாளம், கன்னடம், இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
குவியும் லைக்ஸ்: என்னத்தான் படங்களில் நடித்தாலும், இன்ஸ்டாகிராமில் லைக்சை பெற விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏழு புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கும் பிரியா வாரியர், வெள்ளை நிற கவர்ச்சியில் உடையில் தனது டாட்டூ தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி போட்டோவுக்கு பல லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.