வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 20 நாட்களில் 1.60 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டெங்கு, புளூ, எலி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் காய்ச்சலுக்கு 68 பேர் பலியாகி உள்ளனர். நோயாளிகள் வருகை அதிகம் இருப்பதால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.
கடந்த 20 நாட்களில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 116 பேருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும், இதில் 77 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பருவமழை துவங்கியதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement