பீகார்: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்க இருந்தார். திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சென்னை புறப்பட்டார்.