ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி ஆகும். ஆனால் ஜூன் மாதம் பிறந்ததில் இருந்தே தினமும் கொண்டாடி வருகிறார்கள் தளபதி ரசிகர்கள்.
“எல்லாருமே அரசியலுக்கு வரணும்” சரத்குமார் பேட்டி!
இந்நிலையில் கனடாவில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் டைம்ஸ் சதுக்க பில்போர்டில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ வரும்படி செய்திருக்கிறார்கள். தெறி, சர்கார், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு பட கிளிப்பிங்ஸ் அந்த வீடியோவில் வருகிறது.
டைம்ஸ் சதுக்கத்தில் விஜய் கெத்து காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களை பெருமை அடைய செய்துள்ளது. முன்னதாக கமல் ஹாசன், மாதவன் மற்றும் தனுஷ் ஆகியோரும் டைம்ஸ் சதுக்க பில்போர்டில் வந்தார்கள்.
விஜய்யின் பிறந்தநாளுக்கு டிசைன், டிசைனாக போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். பிற ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
மதுரை ரசிகர்களோ ஒருபடி மேலே போய் வேற லெவலில் போஸ்டர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்கள். அந்த போஸ்டரில், அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே, ஆண்டவர்- ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வரே என்கிற வாசகம் உள்ளது.
அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே: பிறந்தநாள் போஸ்டரில் செந்தில் பாலாஜியை குத்திக்காட்டிய விஜய் ரசிகர்கள்?
அமலாக்கத்துறையை பார்த்ததுமே, விஜய் ரசிகர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மனதில் வைத்து தான் அந்த வாசகத்தை வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை கவுரவித்தார் விஜய். சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சுமார் 1, 600 மாணவ, மாணவியர் கலந்து கொண்டார்கள்.
மாணவ, மாணவியரை கவுரவிக்க நடந்த விழாவுக்காக ரூ. 2 கோடி செலவு செய்திருக்கிறார் விஜய். பாராட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் எதிர்கால இந்தியாவான மாணவ, மாணவியருக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் விஜய்.
நன்றாக யோசித்து வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று கூறினார். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காடு இருந்தால் எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடுங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது என்கிற பட வசனத்தால் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன் என்றார் விஜய். அந்த வசனம் தனுஷின் அசுரன் படத்தில் வந்தது ஆகும்.
Vijay: விஜய் சொன்ன அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்: வெற்றிமாறன்
அது குறித்து அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருடன் அண்ணாவை பற்றியும் மாணவ, மாணவியர் படிக்க வேண்டும் என வெற்றிமாறன் கூறினார்.
கல்வி விருது விழாவுக்கு வந்தவர்கள் விஜய்யை கண்டிப்பாக அரசியலுக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அடுத்த தேர்தலில் கெத்து காட்டுங்கள் அண்ணா என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.