அமெரிக்காவில் பிரதமர் மோடி… வெள்ளை மாளிகை விருந்து டூ எலான் மஸ்க் சந்திப்பு… கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பிரதமர் மோடி இன்று (ஜூன் 20) காலை அமெரிக்காவிற்கு விமானம் மூலம் புறப்பட்டார். கடந்த 2014ல் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 7 முறை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், முதல்முறை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செல்வது கவனிக்கத்தக்கது.

கால் தவறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்… வெள்ளை மாளிகை கொடுத்த விளக்கம்!

மோடியின் அமெரிக்க பயணம்

முன்னதாக ட்விட்டரில் பதிவிட்ட மோடி, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்று உரையாற்றுகிறேன்.

ரஷ்யா கையிலெடுத்த அணு ஆயுதங்கள்… பெலாரஸில் மெகா வியூகம்… பதறிப் போன உலகம்!

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை

பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பேசவுள்ளேன். இதுதவிர தொழிலதிபர்கள், இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் மூன்று நாட்கள் அமெரிக்க பயணத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் உடன் விருந்தில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி.அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இரண்டாவது முறை உரையாற்றும் வாய்ப்பை மோடி பெற்றிருக்கிறார். இவருக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பிரிட்ஜ் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் திரண்டு பிரதமர் மோடி வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் GE-F414 ஜெட் எஞ்சினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த எஞ்சின் தான் அமெரிக்க போர் விமானமான F/A-18 ஹார்நெட்டில் பயன்படுத்தப்படுகிறது.பிரதமர் மோடி சந்திக்கும் நபர்களின் பட்டியலில் டெஸ்லா துணை நிறுவனர் எலான் மஸ்க், அஸ்ட்ரோ பிசிஸ்ட் நீல் டிகிராசி டைசன், கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளி பாடகர் ஃபாலு, பவுல் ரோமர், நிகோலஸ் நாசிம் டலெப், ரே டலியோ, ஜெஃப் ஸ்மித், மைக்கல் ஃப்ரோமன் டேனியல் ரஸ்ஸல், எல்பிரிட்ஜ் கோல்பை, டாக்டர் பீட்டர் அக்ரி, டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கொ, சந்திரிகா டாண்டன் ஆகியோர் அடங்குவர்.
ஜப்பானை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி தாக்குமா.. பீதியில் மக்கள்

எகிப்து சுற்றுப்பயணம்

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு அதிபர் எல்சிசி உடனான பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகிமி மசூதிக்கு செல்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.